×

’’சிவ நாடாரால் பல இலட்சம் இளைஞர்கள் பலனடைய வழிவகை கிடைக்கும்..’’

ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள இந்திய பணக்காரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் முகேஷ் அம்பானியும், இரண்டாவது இடத்தில் அதான் குழுமத்தின் கவுதம் அதானியும் இருக்கிறார். மூன்றாவது இடத்தில் இருப்பவர் தமிழகத்தை சேர்ந்த எச்.சி.எல். நிறுவனத்தின் நிறுவனர் சிவ நாடார். தூத்துக்குடி மாவட்டம் மூலைப்பொழி கிராமத்தில் பிறந்த சிவநாடார் இந்தியாவின் மூன்றாவது பெரிய பணக்காரராக உயர்ந்துள்ளார். ஹெச்.சி.எல்.நிறுவனரான இவரின் சொத்து மதிப்பு ஒரு லட்சத்து 72 ஆயிரம் கோடி ரூபாய். இதுகுறித்து தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின்
 

ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள இந்திய பணக்காரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் முகேஷ் அம்பானியும், இரண்டாவது இடத்தில் அதான் குழுமத்தின் கவுதம் அதானியும் இருக்கிறார். மூன்றாவது இடத்தில் இருப்பவர் தமிழகத்தை சேர்ந்த எச்.சி.எல். நிறுவனத்தின் நிறுவனர் சிவ நாடார்.

தூத்துக்குடி மாவட்டம் மூலைப்பொழி கிராமத்தில் பிறந்த சிவநாடார் இந்தியாவின் மூன்றாவது பெரிய பணக்காரராக உயர்ந்துள்ளார். ஹெச்.சி.எல்.நிறுவனரான இவரின் சொத்து மதிப்பு ஒரு லட்சத்து 72 ஆயிரம் கோடி ரூபாய்.

இதுகுறித்து தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம், ‘’தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் பிறந்து, பில்கேட்ஸ்க்கு முன்னரே பெர்சனல் கம்ப்யூட்டரை கண்டுபிடித்து, தமிழர்கள் பல இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பளித்து, இன்று இந்தியாவின் மூன்றாவது பெரும் பணக்காரராக ஹெச்.சி .எல். நிறுவனர் சிவ்நாடார் உயர்ந்துள்ளார் என்பது தமிழர்கள் அனைவரும் பெருமை கொள்ளக்கூடிய செய்தியாகும். இன்போசிஸ் நாராயணமூர்த்தியை கர்நாடகம் பயன்படுத்தி கொண்டதுபோல சிவ் நாடாரின் திறமையையும், பெருமையையும், தமிழகம் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இதன் மூலம் பல இலட்சம் இளைஞர்கள் பலனடைய வழிவகை கிடைக்கும்’’என்று தெரிவித்திருக்கிறார்.