தமிழ்நாட்டு மீனவர்கள் 24 பேரை சிறை பிடித்தது இலங்கை கடற்படை!
Jul 1, 2024, 07:52 IST
எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். அத்துடன் மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு கோரி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதும் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.
இந்நிலையில் ராமேஸ்வரம்: கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் 24 பேரையும், 4 விசைப்படகுகளை இலங்கை கடற்படை சிறை பிடித்தது.
முன்னதாக இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 37 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.