×

மணமேடைக்கு வந்த தந்தையின் சிலை: மகளின் பாசம்

திருச்சி மாவட்டம் திருமலையை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு நடத்துனர் ராஜேந்திரனும், திருச்சியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக இருக்கும் அவரது மனைவி மல்லிகாவும் தங்களது மூத்த மகள் ஜெயலட்சுமிக்கு வரன் பார்த்து வந்தனர். இந்த சூழ்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்ல் உடல்நலக்குறைவினால் ராஜேந்திரன் உயிரிழந்துவிட்டார். இதன்பின்னர் ஜெயலட்சுமிக்கு வரன் அமைந்து, திருமணம் ஏற்பாடு ஆனது. தந்தை ராஜேந்திரன் மீது அதிக பாசம் கொண்ட ஜெயலட்சுமி, தனது திருமணத்தில் தந்தை இல்லையே என்று நினைத்து நினைத்து கவலைப்பட்டு வந்துள்ளார்.
 

திருச்சி மாவட்டம் திருமலையை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு நடத்துனர் ராஜேந்திரனும், திருச்சியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக இருக்கும் அவரது மனைவி மல்லிகாவும் தங்களது மூத்த மகள் ஜெயலட்சுமிக்கு வரன் பார்த்து வந்தனர்.

இந்த சூழ்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்ல் உடல்நலக்குறைவினால் ராஜேந்திரன் உயிரிழந்துவிட்டார். இதன்பின்னர் ஜெயலட்சுமிக்கு வரன் அமைந்து, திருமணம் ஏற்பாடு ஆனது.

தந்தை ராஜேந்திரன் மீது அதிக பாசம் கொண்ட ஜெயலட்சுமி, தனது திருமணத்தில் தந்தை இல்லையே என்று நினைத்து நினைத்து கவலைப்பட்டு வந்துள்ளார்.

மணமேடையில் தன் தந்தை இல்லாமல் எப்படி தாலிகட்டிக்கொள்வேன் என்று அழுதுள்ளார். அவரின் குறையை போக்க குடும்பத்தினர் ஒரு முடிவு செய்தனர். ராஜேந்திரனின் மெழுகுசிலை செய்து மணமேடையில் வைத்துவிடலாம் என்று முடிவெடுத்து, பெங்களூருவில் ஆர்டர் கொடுத்து, அதன்படியே 6 லட்சம் ரூபாய் செலவில் மெழுகு சிலையை வாங்கிவிட்டனர்.

மணமேடையில் தன் தந்தையே அமர்ந்திருப்பது மாதிரி இருந்த மெழுகு சிலையிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு தாலி கட்டிக்கொண்டார் ஜெயலட்சுமி.

திருமணத்திற்கு வந்திருந்தவர்களை நெகிழச்செய்தது ஜெயலட்சுமியின் பாசம்.