×

ஆழியாறு அறிவுத்திருக்கோயிலின் உலக சாதனை

கோவை மாவட்டத்தின் பொள்ளாச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கும் ஆழியாறில் அமைந்திருக்கிறது அறிவுத்திருக்கோயில். இக்கோயிலின் நிறுவனரும், யோக குருவுமானவர் வேதாத்திரி. அவரது 15ம் ஆண்டு வேள்வி தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. கொரோனா இரண்டாம் அலை பரவிவருவதால் கொரோனா கால நிபந்தனைகளை கடைப்பிடிக்கும் விதமாக வழக்காம நடைபெறும் தவ நிகழ்ச்சியை ஆன்லைன் மூலமாக நடத்த திட்டமிட்டது அறிவுத்திருக்கோயில் நிர்வாகம். அதன்படியே இன்று ஆன்லைன் வழியாக நடைபெற்ற தவ நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அமெரிக்கா,
 

கோவை மாவட்டத்தின் பொள்ளாச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கும் ஆழியாறில் அமைந்திருக்கிறது அறிவுத்திருக்கோயில். இக்கோயிலின் நிறுவனரும், யோக குருவுமானவர் வேதாத்திரி. அவரது 15ம் ஆண்டு வேள்வி தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

கொரோனா இரண்டாம் அலை பரவிவருவதால் கொரோனா கால நிபந்தனைகளை கடைப்பிடிக்கும் விதமாக வழக்காம நடைபெறும் தவ நிகழ்ச்சியை ஆன்லைன் மூலமாக நடத்த திட்டமிட்டது அறிவுத்திருக்கோயில் நிர்வாகம். அதன்படியே இன்று ஆன்லைன் வழியாக நடைபெற்ற தவ நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

அமெரிக்கா, துபாய், ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்களோடு இந்தியாவை சேர்ந்தவர்களும் என்று சுமார் 1 லட்சம் பேர் இந்த தவ நிகழ்ச்சியில் பங்கேற்று உலக சாதனை நடத்தினர்.

உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறவும் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடந்தியதாக அறிவுத்திருக்கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.