×

ரஜினிக்கு புதிய சிக்கல்; என்ன செய்யப்போகிறார்?

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கில் நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஆண்டு பிப்ரவ்ரி மாதம் 24ம்தேதி அன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று ஒரு நபர் ஆணையம் சம்மன் அனுப்பியது. ரஜினி ஆஜராகாமல் அவருக்கு பதிலாக வழக்கறிஞர் ஆஜரானார். அதனால், ரஜினியிடன் கேட்கப்பட வேண்டிய கேள்விகளை சீலிடப்பட்ட கவரில் ஆணையம் வழங்கியது. அதன்பின்னரும் ரஜினி நேரில் விளக்கம் அளிக்காததால் கடந்த டிசம்பர் மாதம் ரஜினிக்கு மீண்டும் சம்மன் அனுபியது ஆணையம். அதில், ஜனவரி 19ம் தேதி அன்று
 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கில் நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஆண்டு பிப்ரவ்ரி மாதம் 24ம்தேதி அன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று ஒரு நபர் ஆணையம் சம்மன் அனுப்பியது. ரஜினி ஆஜராகாமல் அவருக்கு பதிலாக வழக்கறிஞர் ஆஜரானார். அதனால், ரஜினியிடன் கேட்கப்பட வேண்டிய கேள்விகளை சீலிடப்பட்ட கவரில் ஆணையம் வழங்கியது.

அதன்பின்னரும் ரஜினி நேரில் விளக்கம் அளிக்காததால் கடந்த டிசம்பர் மாதம் ரஜினிக்கு மீண்டும் சம்மன் அனுபியது ஆணையம். அதில், ஜனவரி 19ம் தேதி அன்று ரஜினி நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

கொரோனா காரணத்தினால் தான் நேரில் ஆஜராகமுடியாது என்று சொல்லி தவிர்த்தார் ரஜினி.

கொரோனாவினால் விசாரணைக்கு நேரில் ஆஜராகாமல் இருக்கும் ரஜினி, அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வரும் தகவல் பரவியது.

இதையடுத்து விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர் அருள் வடிவேல், ‘’கொரோனா வரும் என்றெல்லாம் அச்சம் இல்லாமல் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைக்குழு முன்பாக ரஜினிகாந்த் ஆஜராகலாம். அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தை விடவும் விசாரணை ஆணைய வளாகம் பாதுகாப்பானது. படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் கூட்டத்தை விடவும் ஆணையத்தில் இருப்போரின் எண்ணிக்கை குறைவு. ஐந்த பேர் உள்ள ஓர் அறையில்தான் இந்த விசாரணை நடைபெறும். அதனால் ரஜினி எந்தவித பயமும் இன்றி ஆஜராகலாம்’’ என்று தெரிவித்திருக்கிறார்.

வழக்கறிஞர் அருள் வடிவேல் சொல்லும் உதாரணம் வலுவாக இருக்கிறது. இதனால் ரஜினிக்கு புதிய சிக்கல் உருவாகி இருக்கிறது. இந்த முறை ஆணையம் அனுப்பும் சம்மனுக்கு கட்டாயம் நேரில் ஆஜராகவேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதிலிருந்து எப்படி எஸ்கேப் ஆகப்போகிறாரோ?