×

மார்ச் 21 முதல் விசிக விருப்பமனு விநியோகம்

 

வரும் சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பேட்டியிட விரும்புவர்களிடம் இருந்து, வரும் மார்ச் 21, 22, 23, 24 ஆகிய தேதிகளில் சென்னை வேளச்சேரியில் இருக்கக்கூடிய தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு பெறப்படுகிறது.

2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையகமான அம்பேத்கர் திடலில் விருப்ப மனு அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 21ம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டத்திற்கும், வரும் 22ம் தேதி கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, சேலம், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கும் வரும் 23ம் தேதி ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கும், வரும் 24ம் தேதி திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய நாட்களில் குறிப்பிட்ட மாவட்டங்களைச் சார்ந்தோர் மட்டும் விருப்ப மனுக்களை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண், பெண் இருபாலாருக்கும் விருப்ப மனு கட்டணமாக ரூ.5000 செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.