×

அதை நினைத்தால் என் மனசு கனக்கிறது… ராகுல்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த அச்சங்குளத்தில் சக்திவேல் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் 100க்கும் மேற்பட்டோர் வேலை செய்துவந்தனர். வழக்கம் போல இன்றும் தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட தீவிபத்தினால் 12 பேர் உயிரிழந்தனர். 24 பேர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். படுகாயமடைந்தவர்கல் சாத்தூர்,சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக ஆட்சியரும், தீயணப்பு துறையினரும் தெரிவித்துள்ளனர். பட்டாசுகளுக்கு இடையே ஏற்பட்ட உராய்வுதான் இந்த வெடி விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து
 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த அச்சங்குளத்தில் சக்திவேல் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் 100க்கும் மேற்பட்டோர் வேலை செய்துவந்தனர். வழக்கம் போல இன்றும் தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட தீவிபத்தினால் 12 பேர் உயிரிழந்தனர். 24 பேர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். படுகாயமடைந்தவர்கல் சாத்தூர்,சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக ஆட்சியரும், தீயணப்பு துறையினரும் தெரிவித்துள்ளனர்.

பட்டாசுகளுக்கு இடையே ஏற்பட்ட உராய்வுதான் இந்த வெடி விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து ராகுல்காந்தி, ‘’விருதுநகர் பட்டாசு தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். உள்ளே சிக்கியிருக்கிறார்களே… அதை நினைத்தால் என் மனசு கனக்கிறது’’ என்று தெரிவித்துள்ளவர்,

‘’தமிழக அரசு மீட்பு பணிகளை துரிதப்படுத்தவேண்டும், நிவாரண உதவிகளையும் உடனடியாக வழங்க வேண்டும்’’ என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.