×

நேபாள வெள்ளத்தில் மீட்கப்பட்ட 21 தமிழர்கள் சென்னை வருகை: அமைச்சர்கள் நேரில் வரவேற்பு!

 

சென்னையைச் சேர்ந்த 5 பேர், கடலூரைச் சேர்ந்த 9 பேர், மயிலாடுதுறை மற்றும் திருச்சியை சேர்ந்த தலா 3 பேர், கிருஷ்ணகிரியை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 21 பேர் சென்னை வந்தடைந்தனர். அவர்களை விமான நிலையத்தில் அமைச்சர்கள் ஆனந்த் மற்றும் சரத்குமார் நேரில் வரவேற்றனர். அப்போது பேட்டியளித்த அமைச்சர் ஆனந்த், மீதமுள்ள தமிழர்களையும் மீட்கும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

நேபாளத்தில் இருந்து சென்னை திரும்பியவர்கள், தங்களை பத்திரமாக அழைத்து வந்த மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

#NewsUpdate || நேபாளத்தில் இருந்து மீட்கப்பட்ட 21 தமிழர்கள் சென்னை வருகை..! | NewsJ#Nepal #TamilNadu #TamilPeople #Chennai #Rescue #NepalCrisis #NewsJ pic.twitter.com/wYKJxJ288b

— NewsJ (@NewsJTamil) August 29, 2026