×

2020 தமிழக பட்ஜெட்: விபத்தில் மரணம் அடைந்தால் ரூ.4 லட்சம் இழப்பீடு – ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு

விபத்தில் மரணம் அடையும் நபர்களின் குடும்பத்திற்கான இழப்பீட்டுத் தொகை ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும் என்று 2020 தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை: விபத்தில் மரணம் அடையும் நபர்களின் குடும்பத்திற்கான இழப்பீட்டுத் தொகை ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும் என்று 2020 தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் 2020–2021ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார். மேலும் இது அவர் தாக்கல் செய்யும் 10-வது பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தாண்டு பல்வேறு புதிய
 

விபத்தில் மரணம் அடையும் நபர்களின் குடும்பத்திற்கான இழப்பீட்டுத் தொகை ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும் என்று 2020 தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: விபத்தில் மரணம் அடையும் நபர்களின் குடும்பத்திற்கான இழப்பீட்டுத் தொகை ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும் என்று 2020 தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் 20202021ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார். மேலும் இது அவர் தாக்கல் செய்யும் 10-வது பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தாண்டு பல்வேறு புதிய அறிவிப்புகள் தமிழக பட்ஜெட்டில் இடம்பெற்றன. அந்த வகையில், விபத்தில் மரணம் அடையும் நபர்களின் குடும்பத்திற்கான இழப்பீட்டுத் தொகை ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும் என்று 2020 தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்தினால் நிரந்தர ஊனமுற்றோருக்கு உதவித் தொகை ரூ.2 லட்சம் வரை கணிசமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை மரணங்களில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் என்று ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார். 2020-2021ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் இத்திட்டத்திற்காக ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட திட்டங்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் புதிய ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பயன்பெற முடியாத நபர்களுக்காக, தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் விபத்து நிவாரணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.