×

பாட்டிலுக்கு ரூ.10 லஞ்சம் வாங்கிய 200 டாஸ்மாக் பணியாளர்கள் அதிரடி சஸ்பெண்ட் 

 

கடந்த 20 நாட்களில் 200 பணியாளர்களை சஸ்பெண்ட் செய்து டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட மதுபாட்டிலுக்குக் கூடுதலாக 10 ரூபாய் வசூலிப்பதாக எழுந்த தொடர் புகார் எழுந்தது. இந்நிலையில் கடந்த 20 நாட்களில் கூடுதலாக ரூ.10  வசூல் செய்த 200 பணியாளர்களை டாஸ்மாக் நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. பாட்டிலுக்கு ரூ.10 வாங்கியது தொடர்பான புகாரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து ரூ.10 கூடுதலாக யார் வாங்கினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.