×

இனி ரூ.200 அபராதம்.. சென்னை மாநகராட்சி கெடுபிடி!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி வருவதால், புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தியேட்டர்களில் 50% பார்வையாளர்கள், ஹோட்டல்கள், மால்கள், கடைகள் உள்ளிட்டவற்றில் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி, பேருந்துகளில் நின்று பயணிக்க தடை, திருவிழாக்கள் நடத்தக் கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வரவுள்ளது. இதனிடையே பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அதிரடி நடவடிக்கையை கையிலெடுத்துள்ளன. குறிப்பாக, மக்கள் அதிகம் வசிக்கும் சென்னையில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வீடு தோறும்
 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி வருவதால், புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தியேட்டர்களில் 50% பார்வையாளர்கள், ஹோட்டல்கள், மால்கள், கடைகள் உள்ளிட்டவற்றில் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி, பேருந்துகளில் நின்று பயணிக்க தடை, திருவிழாக்கள் நடத்தக் கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வரவுள்ளது.

இதனிடையே பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அதிரடி நடவடிக்கையை கையிலெடுத்துள்ளன. குறிப்பாக, மக்கள் அதிகம் வசிக்கும் சென்னையில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வீடு தோறும் பரிசோதனை, நடமாடும் மருத்துவ முகாம்கள் உள்ளிட்டவை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ.200, பொது இடங்களில் எச்சில் துப்பினால் சமூக இடைவெளியை பின்பற்றாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படுமென சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா விதியை மீறுபவர்களிடம் இருந்து அபராதமாக தினசரி ரூ.10 லட்சம் வசூலிக்க இலக்கு நிர்ணயித்துள்ள சென்னை மாநகராட்சி, ராயபுரம் மற்றும் தேனாம்பேட்டை மண்டலங்களில் தினமும் ரூ.1.50 லட்சம் அபராதம் வசூலிக்க வேண்டும் என்றும் வணிக வளாகங்கள், சலூன்கள், ஜிம், ஸ்பா, நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் விதிகளை பின்பற்றாமல் இருந்தால் ரூ.5,000 அபராதம் வசூலிக்க வேண்டும் என்றும் குவாரண்டைன் விதிகளை மீறுவோருக்கு ரூ.500 அபராதம் விதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.