☰
×

இடும்பன் கோயிலில் சாமிக்கு கூட பயப்படாமல் துணிகரம் - ஆண் நண்பருடன் பிடிபட்ட பெண் ஊழியர்

 

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பழனி இடும்பன் கோயிலில் தோராயமாக 20 சவரன் தங்க ஆபரணங்கள் 3 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டுப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பழனி இடும்பன் கோயிலில் தோராயமாக 20 சவரன் தங்க ஆபரணங்கள் 3 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டுப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருட்டு சம்பவத்தில் கோயில் தற்காலிக பெண் ஊழியர் நிரஞ்சனா(26) அவரது ஆண் நண்பர் பிரபாகரன் (29) இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 9 மாதங்களாக தற்காலிக ஊழியர் நிரஞ்சனா சிறிது சிறிதாக தங்க நகைகள் வெள்ளி பொருட்களை திருடி தன் ஆண் நண்பருடன் சேர்ந்து விற்று பணமாக மாற்றி உல்லாசமாக இருந்து வந்தது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணையில் உள்ளனர்.