×

இறந்தும் 5 பேருக்கு வாழ்வளித்த 2 வயது குழந்தை… கலங்க வைக்கும் நெகிழ்ச்சி சம்பவம்!

2 வயது பெண் குழந்தை இருந்த போதிலும் தனது உடல் உறுப்புகளால் 5 பேருக்கு வாழ்வளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை சேர்ந்தவர் ஆஷிஷ் குமார். இவருக்கு பபிதா என்ற மனைவியும் தனுஷ்தா என்ற 2 வயது மகளும் உள்ளனர். தனுஷ்தா கடந்த 8 ஆம் தேதி தனது வீட்டின் பால்கனியில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 11 ஆம் தேதி மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தை இறந்த
 

2 வயது பெண் குழந்தை இருந்த போதிலும் தனது உடல் உறுப்புகளால் 5 பேருக்கு வாழ்வளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியை சேர்ந்தவர் ஆஷிஷ் குமார். இவருக்கு பபிதா என்ற மனைவியும் தனுஷ்தா என்ற 2 வயது மகளும் உள்ளனர். தனுஷ்தா கடந்த 8 ஆம் தேதி தனது வீட்டின் பால்கனியில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 11 ஆம் தேதி மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தை இறந்த சோகத்திலும் தனுஷ்தா பெற்றோர் அதிரடியான ஒரு முடிவு எடுத்துள்ளனர். அதாவது குழந்தை தனுஷ்தாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முன்வந்துள்ளனர். இதன்மூலம் தனுஷ்தா இதயம், அப்போலோ மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 5 மாத குழந்தைக்கு பொருத்தப்பட்டுள்ளது . அதே போல் அவரின் சிறுநீரகம் உள்ளிட்ட பிற உறுப்புகளும் உயிருக்கு போராடிய 4 பேருக்கு பொருத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் குழந்தை தனுஷ்தாவின் உடல் உறுப்புகளினால் 5 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர். இதுகுறித்து கூறும் அவரது தந்தை, “என் குழந்தை மருத்துவமனையில் உயிருக்கு போராடிய போது அங்கு உடல் உறுப்புகள் கிடைக்காமல் பல நோயாளிகள் இறந்ததை என்னால் பார்க்க முடிந்தது. இதனால் நாங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தோம். இதனால் என் குழந்தை இறப்பின் வலி என்னை விட்டு நீங்காது; இருந்தாலும் என் மகள் உடல் உறுப்புகளால் சிலர் வாழ்வதைக் கண்டு நான் நிம்மதி அடைய முடியும். அவளை அதன் மூலம் நினைவு கூற முடியும் . இந்த பெருமை என் வலியை நீக்கும் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

குழந்தை தனுஷ்தாவின் உடல் உறுப்பு, தானம் செய்யப்பட்ட நிலையில் இந்தியாவின் குறைந்த வயது உடல் உறுப்பு நன்கொடையாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.