☰
×

தீபாவளிக்கு ஜாக்பாட்! சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு 20% போனஸ்

 

போனஸ் அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவு நிறுவன பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகை - தமிழ்நாடு அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. 


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவு நிறுவன பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகை - தமிழ்நாடு அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் உத்தரவுப்படி கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் 44,573 பணியாளர்களுக்கு மொத்தம் ரூ.49.69 கோடி போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் மொத்தம் 16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை என மொத்தம் 18 சர்க்கரை ஆலைகள்* உள்ளன. இந்த ஆலைகளில் பணிபுரிந்து வரும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் அனைவருக்கும் எதிர்வரும் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2025-2026 ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் (BONUS) மற்றும் கருணைத் தொகையை (Ex-Gratia) வழங்க ஆணையிட்டுள்ளார்கள்.


அரசாணையின் படி இரண்டு வகையாக பிரித்து போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது:

1. லாபத்தில் இயங்கும் 2 ஆலைகளுக்கு - 20% போனஸ்:
- ஆலைகள்:ஒதுக்கீட்டு உபரி உள்ள சுப்ரமணிய சிவா மற்றும் கள்ளக்குறிச்சி - II ஆகிய இரு கூட்டுறவு சர்க்கரை ஆலைகள்.
- போனஸ்: மிகை ஊதியமாக 8.33% + கருணைத் தொகையாக *11.67%* என *மொத்தம் 20% போனஸ் வழங்கப்படும்.

2. மீதமுள்ள 16 ஆலைகளுக்கு - 10% போனஸ்:
- ஆலைகள்: மீதமுள்ள 14 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகள்.
- போனஸ்: மிகை ஊதியமாக 8.33% + கருணைத் தொகையாக 1.67% என மொத்தம் 10% போனஸ் வழங்கப்படும்.

இதன் மூலம், தமிழ்நாட்டில் உள்ள 16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் சுமார் 5190 தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் பயன்பெறுவர். இதற்காக அரசுக்கு ரூ.351.40 லட்சம் செலவினம் ஏற்படும். இந்த அறிவிப்பால் சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த வருட தீபாவளியை அவர்கள் குடும்பத்துடன் சிறப்பாக கொண்டாடுவார்கள்.