×

செல்பி மோகம்: சறுக்கி கடலில் விழுந்து மாயமான இளைஞர்கள்!

கன்னியாகுமரியில் பாறையில் ஏறி செல்ஃபி எடுக்க முயன்ற 2 இளைஞர்கள், கடலில் தவறி விழுந்து மாயமான சம்பவம் பதைபதைக்கச் செய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ஆலஞ்சி பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் இன்று கிரகப்பிரவேசம் நடந்துள்ளது. அதில் கலந்து கொள்வதற்காக செங்கல்பட்டை சேர்ந்த 17 பேர் கன்னியாகுமரிக்கு சென்றுள்ளனர். காலை கிரகப்பிரவேசம் முடிந்த உடன், அவர்கள் அனைவரும் பாலியக்கல் கடற்கரைக்கு சென்றுள்ளனர். அதில் 3 பேர் மட்டும் அங்கிருந்த பாறை மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். எஞ்சிய நபர்கள்
 

கன்னியாகுமரியில் பாறையில் ஏறி செல்ஃபி எடுக்க முயன்ற 2 இளைஞர்கள், கடலில் தவறி விழுந்து மாயமான சம்பவம் பதைபதைக்கச் செய்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் ஆலஞ்சி பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் இன்று கிரகப்பிரவேசம் நடந்துள்ளது. அதில் கலந்து கொள்வதற்காக செங்கல்பட்டை சேர்ந்த 17 பேர் கன்னியாகுமரிக்கு சென்றுள்ளனர். காலை கிரகப்பிரவேசம் முடிந்த உடன், அவர்கள் அனைவரும் பாலியக்கல் கடற்கரைக்கு சென்றுள்ளனர்.

அதில் 3 பேர் மட்டும் அங்கிருந்த பாறை மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். எஞ்சிய நபர்கள் எல்லாம் கரையிலேயே இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், பாறை மீது ஏறிய 3 இளைஞர்கள் செல்பி எடுக்க முயன்ற போது தவறி கடலில் விழுந்துள்ளனர். அவர்களுள் ஒருவர் மட்டும் தப்பிக் கரையேறியுள்ளார். செங்கல்பட்டை சேர்ந்த பாலாஜி (19) என்பவரும் கப்பியறையைச் சேர்ந்த ஜெபின்(24) என்பவரும் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

தகவல் அறிந்த மீனவர்கள், அவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடல் சீற்றத்தால் இளைஞர்களை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.