மயக்க மருந்தால் 2 வயது குழந்தை உயிரிழப்பு?
Dec 8, 2025, 18:59 IST
காஞ்சிபுரத்தில் கதவு இடுக்கில் சுண்டு விரல் சிக்கிய 2 வயது குழந்தை மயக்க மருந்தால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரத்தை சேர்ந்த 2 வயது குழந்தையின் கை சுண்டு விரல் கதவு இடுக்கில் சிக்கியுள்ளது. இதனையடுத்து அக்குழந்தையை பெற்றோர், செங்கல்பட்டில் உள்ள ரங்கா என்ற தனியார் மருத்துவமனையில் அழைத்து சென்றுள்ளனர். அங்கு குழந்தைக்கு அளவுக்கு அதிகமான மயக்க மருந்து கொடுத்ததால் சுய நினைவை இழந்து இறந்ததாக புகார் எழுந்துள்ளது. மேலும் ரமணா பட பாணியில் குழந்தை உயிருடன் இருப்பது போல் நாடகமாடி நம்ப வைத்து மருத்துவர்கள் ஏமாற்றியதாக பெற்றோர் கண்ணீருடன் வேதனை தெரிவிக்கின்றனர்.