#JUSTIN தமிழகத்தில் 2 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
வேளாண் துறை செயலாளர் சங்கர், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
வேளாண் துறை செயலாளர் சங்கர், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சமூக நீதித்துறை செயலாளராக உள்ள என்.சுப்பையன், வேளாண் துறை செயலாளராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என என்று தலைமைச் செயலாளர் எம்.சாய்குமார் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறை (சிறப்பு-ஏ) வெளியிட்டுள்ள அரசாணை எண் 3242-ன் படி, தமிழ்நாடு வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி வந்த டாக்டர் பி.சங்கர் ஐஏஎஸ் மாற்றப்பட்டு, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை இப்பதவியைக் கூடுதல் பொறுப்பாகக் கவனித்து வந்த டாக்டர் வி.பி.ஜெயசீலன் ஐஏஎஸ்க்கு பதிலாக இவர் இப்புதிய பொறுப்பினை ஏற்கிறார். அரசாணை எண் 3243-ன் படி, சமூக நீதித்துறை செயலாளராகப் பணியாற்ற வரும் டாக்டர் என்.சுப்பையன் ஐஏஎஸ்-க்கு, வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை அரசுச் செயலாளர் பொறுப்பு முழு கூடுதல் பொறுப்பாக (Full Additional Charge) வழங்கப்பட்டுள்ளது.