நேபாளத்தில் பெருவெள்ளத்தின் போது சுரங்கத்திற்குள் சிக்கிய 2 பேர் உயிருடன் மீட்பு..!!
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக பலத்த உயிா்ச்சேதங்களுடன் பேரழிவு ஏற்பட்டது. இன்று காலை நிலவரப்படி, நேபாள வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,290 ஆக உயர்ந்துள்ளது.
இந்த வெள்ளத்தில் போடே கோஷி, திரிசூலி நதிகளின் குறுக்கே இருந்த நீா்மின் நிலையத்தின் சுரங்கங்கள் உருகுலைந்தன. இந்த நீர்மின் நிலையங்களில் 150-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன..
இதனைத் தொடர்ந்து, திரிசூலி நீா்மின் நிலையத்தின் சுரங்கத்துக்குள் சிக்கியுள்ளவர்கள் மீட்கும் பணியில் கடந்த 9 நாள்களாக நேபாள ராணுவம் ஈடுபட்டுள்ளது. அவர்களுடன் இந்திய சுரங்க மீட்பு தொழில்நுட்ப நிபுணா் குழுவினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், 9 நாள்களுக்குப் பிறகு சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த இருவரை இன்று காலை நேபாள ராணுவத்தினர் உயிருடன் மீட்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் சஞ்சய் ஷா மற்றும் கபீர் மகாராஜன் என திரிசூலி நீா்மின் திட்ட அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
இதையடுத்து, சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கும் மேலும் 150 பேரை மீட்கும் பணியை நேபாள ராணுவத்தினர் விரைவுப்படுத்தியுள்ளனர்.