ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய 2 பெண் சப் இன்ஸ்பெக்டர்கள் கைது!
ஆவடி மாநகரக் காவல் எல்லைக்குட்பட்ட திருமுல்லைவாயல் காவல் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பெண் உதவி ஆய்வாளர்கள், ஸ்பா (spa) உரிமையாளர் ஒருவரிடம் 20,000 ரூபாய் லஞ்சம் பெற்றதற்காக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் பணிபுரியும் இரண்டு பெண் சப்- இன்ஸ்பெக்டர்கள் ரூ 20,ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டனர். திருமுல்லைவாயில், சி. டி. எச்., சாலையில் அழகு நிலையம் மற்றும் ஸ்பா நடத்தி வரும் பெண் உரிமையாளரிடம் மாதம்தோறும் ரூபாய் 50.ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் எனக் கூறி முதல் கட்டமாக இன்று ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்றபோது திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் பணி புரியும் இரண்டு பெண் சப் இன்ஸ்பெக்டர்கள் 1.பாக்கியலட்சுமி, SI 2.அமுல் SSI ஆகிய இருவரையும் காவல் நிலையத்தில் வைத்து திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஜெயக்குமார் இன்று கைது செய்தார்.