மதம் பிடித்து இருவர்களை கொடூரமாக கொன்ற யானை
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் கோயில் திருவிழாவிற்காக கொண்டுவரப்பட்ட யானை திடீரென மதம்பிடித்து மிரண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. லாரி ஓட்டுநர் இருவரை மிதித்தே கொன்றுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள அங்கமாலி கிடங்கூர் உள்ள மகாவிஷ்ணு கோவிலில் நடைபெற்ற திருவிழாவிற்காக கொல்லத்திலிருந்து மய்ய நாடு பார்த்தசாரதி என்ற யானை லாரி மூலம் திருவிழாவிற்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் யானை குளிப்பதற்காக அருகில் இருந்த குளத்திற்கு அழைத்துச் செல்லும்போது திடீரென யானை மிரண்டு ஓடியது இந்த யானையை லாரி மூலம் கொண்டு வந்த லாரி ஓட்டுனரான விஷ்ணுவை தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். மேலும் இரண்டாம் பாகனான பிரதிபையும் யானை தாக்கியது. இதில் விஷ்ணு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
படுகாயமடைந்த இரண்டாம் பாகன் பிரதீப்பை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். முதுகெலும்பில் பலத்த காயங்களுடன் தற்பொழுது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கும் இங்குமாக ஓடிய யானையை கட்டுப்படுத்த யானை அதிரடி விரைவுப் படையினர் வந்தபோதும் யானையை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் ஸ்கூட்டர் உள்ளிட்ட வாகனங்களை அடித்து சேதப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து திருச்சூரிலிருந்து யானை படையினர் வரவழைக்கப்பட்டு யானைக்கு மயக்கம் மருந்து செலுத்தி யானையை மயக்கமடைய செய்தனர்.யானை மிரண்டு ஓடியதால் அப்பகுதியில் நான்கு மணி நேரம் போர்க்களமாக காட்சியளித்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பதட்டமான சூழ்நிலை நிலவியது.