☰
×

பொங்கல் 2027க்கு 2.27 கோடி வேட்டி, சேலை

 

தமிழ்நாடு அரசின் பொங்கல் 2027 இலவச வேட்டி சேலை வினியோகத் திட்டத்திற்கான பணிகள் தீவிரமாக தொடங்கியுள்ளன. இதற்காக தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் லிட்., (கோ-ஆப்டெக்ஸ்  முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஈரோடு வில்லரசம்பட்டி மற்றும் ஈரோடு நசியனூர் (மஞ்சள் வளாகம்) மற்றும் வேலூர் கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள பொங்கல் 2027 (DSDS Pongal 2027) வேட்டி, சேலைகளை தமிழ்நாட்டில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக (TNCSC) கிடங்குகளுக்கு கொண்டு செல்ல லாரிகள் வாடகைக்கு எடுக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இதில் போக்குவரத்து கட்டணம் மற்றும் ஏற்றுக்கூலி, இறக்குக்கூலி அடங்கும். இது வெறும் டிரான்ஸ்போர்ட் டெண்டர் மட்டும் அல்ல, இதன் பின்னணியில் மிகப்பெரிய திட்டம் உள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள 2.23 கோடி அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் இந்த பொங்கல் பரிசை பெற உள்ளனர். அரசாணையின் படி மாவட்ட ஆட்சியர்கள் கேட்டதன் அடிப்படையில் 2,27,83,417 சேலைகள் மற்றும் 2,25,14,094 வேட்டிகள் தேவை என கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் அரசு இறுதியாக 177.64 லட்சம் சேலைகள் மற்றும் 177.22 லட்சம் வேட்டிகள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. இது தவிர முதியோர் உதவித்தொகை பெறுவோருக்கும் வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு மொத்தம் ரூ.642.88 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டு, முதல் தவணையாக ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால் கைத்தறி நெசவாளர்களுக்கு 6 மாதம் தொடர் வேலை மற்றும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஜவுளி தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அரசு தெரிவித்துள்ளது.