×

சென்னையில் ₹2.18 கோடி அபராதம் வசூல்: 1,805 வாகனங்கள் பறிமுதல்!

தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நாளில் நேற்று ஒரேநாளில் சென்னையில் மட்டும் 2,409 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுபடுத்த நேற்று முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது . இந்த ஊரடங்கு காலத்தில் இறைச்சி கடைகள், காய்கறி, மளிகை போன்ற எந்த கடைகளும் இயங்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் பொது மக்களின் பொது நலன் கருதி காய்கறி மற்றும் பழங்களை வாகனங்கள் மூலம் அரசே விற்பனை செய்யும் நடைமுறையை தமிழகம்
 

தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நாளில் நேற்று ஒரேநாளில் சென்னையில் மட்டும் 2,409 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுபடுத்த நேற்று முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது . இந்த ஊரடங்கு காலத்தில் இறைச்சி கடைகள், காய்கறி, மளிகை போன்ற எந்த கடைகளும் இயங்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் பொது மக்களின் பொது நலன் கருதி காய்கறி மற்றும் பழங்களை வாகனங்கள் மூலம் அரசே விற்பனை செய்யும் நடைமுறையை தமிழகம் முழுவதும் கொண்டு வந்துள்ளது.

இந்த சூழலில் பொதுமுடக்க விதிமுறைகளை மீறி வெளியில் சுற்றுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது. அந்த வகையில் முழு ஊரடங்கு நாளான முழு ஊரடங்கி முதல் நாளான நேற்று விதிகளை மீறி வெளியில் சுற்றிய 2,409 பேர் மீது சென்னையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்டதாக சுமார் ஆயிரத்து 805 வாகனங்கள் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சென்னையில் கடந்த 45 நாட்களில் குறைந்தபட்ச பாதுகாப்பு விதிகளை மீறியதாக 2.18 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு விதிகளை கடைபிடிக்க தவறிய சுமார் 890 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.