×

தமிழினத்தின் விடுதலைப் போராட்ட வீரச்சுவடுகளை முற்றாகச் சிதைக்கும் சிங்கள ஆதிக்கத்தைத் தகர்ப்போம்.. திருமாவளவன்

இலங்கைப் போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாண பல்கலையில் அமைக்கப்பட்ட நினைவுத்தூண் நேற்று நள்ளிரவில் இடித்து தகர்க்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார் தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அவர் மேலும், ஈழப்போரில் ஈவு இரக்கமின்றி கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க போராடிக் கொண்டிருக்கிற வேளையில், தமிழர்களின் உணர்வை மேலும் ரணப்படுத்தும், இனவெறியினரின் இந்த இழிசெயல் கடும் கண்டனத்திற்குரியது. ஏற்றுக்கொள்ள முடியாத இக்கொடுஞ்செயலை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இலங்கை, முள்ளிவாய்க்காலில்
 

இலங்கைப் போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாண பல்கலையில் அமைக்கப்பட்ட நினைவுத்தூண் நேற்று நள்ளிரவில் இடித்து தகர்க்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார் தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

அவர் மேலும், ஈழப்போரில் ஈவு இரக்கமின்றி கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க போராடிக் கொண்டிருக்கிற வேளையில், தமிழர்களின் உணர்வை மேலும் ரணப்படுத்தும், இனவெறியினரின் இந்த இழிசெயல் கடும் கண்டனத்திற்குரியது. ஏற்றுக்கொள்ள முடியாத இக்கொடுஞ்செயலை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இலங்கை, முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் இரக்கமின்றி கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவு தூண் இரவோடு இரவாக இடிக்கப்பட்டுள்ள செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

உலக தமிழர்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ள இலங்கை அரசின் இந்த மாபாதக செயலுக்கும் அதற்கு துணை போன யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இலங்கை இறுதிப்போரின் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கடந்த 2018ம் ஆண்டுமுள்ளிவாய்க்கால் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நினைவிடத்தினை நேற்று நள்ளிரவில் இடித்து தரை மட்டமாக்கி இருக்கிறார்கள். இதை கண்டித்து மாணவர்களும், பொதுமக்களும் இலங்கையில் போராடி வருகின்றனர்.

இதற்கு ஆதரவாகவும், யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு மண்டபத்தை இடித்ததற்காக தமிழ்நாட்டில் உள்ள தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழகமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சி சீமான் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், ‘’யாழ் பல்கலைக் கழகத்திலுள்ள முள்ளி வாய்க்கால் நினைவுச் சின்னத்தை இடித்துள்ளனர்.
சிங்கள இனவெறிப் படையினரின் இந்த இழிசெயலை விசிக வன்மையாக கண்டிக்கிறது’’என்கிறார்.

மேலும், ‘’தமிழினத்தின் விடுதலைப் போராட்ட வீரச்சுவடுகளை முற்றாகச் சிதைக்கும் சிங்கள ஆதிக்கத்தைத் தகர்ப்போம். தமிழர் அடையாளம் காப்போம்’’என்கிறார்.