×

சென்னையில் கொரோனாவால் ஒரே நாளில் 19 பேர் பலி!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் பெருமளவில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து வந்தும், பாதிப்பு குறைந்ததாக இல்லை. இதனிடையே கொரோனாவால் போடப்பட்டிருந்த ஊரடங்கு ஓரளவு தளர்த்தப்பட்டதால் தான் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்ததாக சொல்லப்படுகிறது. கடந்த சில நாட்களாக கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், சென்னையில் தான் அதிக அளவு உயிரிழப்பு ஏற்படுகிறது. அதனால் சென்னையில் மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டும், உயிரிழப்புகளும் பாதிப்பும் அதிகரித்த வண்ணமே
 

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் பெருமளவில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து வந்தும், பாதிப்பு குறைந்ததாக இல்லை. இதனிடையே கொரோனாவால் போடப்பட்டிருந்த ஊரடங்கு ஓரளவு தளர்த்தப்பட்டதால் தான் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்ததாக சொல்லப்படுகிறது. கடந்த சில நாட்களாக கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், சென்னையில் தான் அதிக அளவு உயிரிழப்பு ஏற்படுகிறது. அதனால் சென்னையில் மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டும், உயிரிழப்புகளும் பாதிப்பும் அதிகரித்த வண்ணமே உள்ளது.

இந்நிலையில் சென்னையில் இன்று ஒரே நாளில் 19 பேர் கொரோனாவால் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 7 பேரும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 4 பேரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதே சென்னை வாசிகளின் கோரிக்கையாக இருக்கிறது.