×

சட்டவிரோதமாக மதுபான பார் நடத்திய 19 பேர் கைது!

சட்டவிரோதமாக மதுபானபார் நடத்திவர்களை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் தேனியில் அரங்கேறியுள்ளது. தேனி மாவட்டத்தில் சட்டவிரோதமாக பார் நடத்துவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் 14 இடங்களில் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக மதுபான பார் நடத்திவந்த 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 5,300 டாஸ்மாக் கடைகளுடன் இணைந்து 3 ஆயிரம் பார்கள் இணைந்து செயல்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா காரணத்தினால் கடந்த மார்ச் மாதம் முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து தளர்வுகளுடன் கூடிய
 

சட்டவிரோதமாக மதுபானபார் நடத்திவர்களை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் தேனியில் அரங்கேறியுள்ளது.

தேனி மாவட்டத்தில் சட்டவிரோதமாக பார் நடத்துவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் 14 இடங்களில் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக மதுபான பார் நடத்திவந்த 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 5,300 டாஸ்மாக் கடைகளுடன் இணைந்து 3 ஆயிரம் பார்கள் இணைந்து செயல்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா காரணத்தினால் கடந்த மார்ச் மாதம் முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. இருப்பினும் தமிழகத்தில் இன்னும் பார்கள் திறக்கப்படவில்லை.

தீபாவளிக்கு முன்பாக தமிழகத்தில் டாஸ்மாக் பார்கள் திறக்க தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் சட்டவிரோதமாக மதுபான பார்கள் நடத்தி வந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.