முதல்வர் சென்னையை தாண்டிய உடன் "ஆபரேஷன் ஸ்பெஷல் டிரைவ்" - ஒரே இரவில் 185 ரவுடிகள் கைது
சென்னை மாநகரத்தில் குற்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடிய விடிய நடத்திய தேடுதல் வேட்டையில் 185 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகரத்தில் குற்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடிய விடிய நடத்திய தேடுதல் வேட்டையில் 185 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். “ஆப்ரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” மூலம் கைது செய்யப்பட்டவர்களில் 112 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக சென்னை மாநகர காவல் ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். பெசண்ட் நகர் மற்றும் திருவொற்றியூர் பகுதிகளில் நடைபெற்ற படுகொலை சம்பவங்களை தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்விரோதம் உள்ள ரவுடிகள், கட்டப்பஞ்சாயத்து, போதை பொருள் விற்பனை செய்யும் ரவுடிகளை கண்காணித்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகாதவர்களை பிடித்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளதாகவும் காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது.