×

திமுகனா சும்மாவா? தி.மலையில் 13 இடங்களில் 1800 ஆடுகளை பலியிட்டு சுடசுட தடபுடலாக தயாராகும் பிரியாணி

 

திருவண்ணாமலையில் நடைபெறும் வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வருகை தரும் நிர்வாகிகளுக்காக காலை முதல் சுடச்சுட மட்டன் பிரியாணி பிரம்மாண்டமாக தயாராகிவருகிறது.


திருவண்ணாமலை மலைப்பாம்பாடி கிராமத்தில் உள்ள கலைஞர் திடலில் இன்று மாலை வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்று உள்ளார். இந்த நிகழ்ச்சிக்காக திருவண்ணாமலை வேலூர் தர்மபுரி கிருஷ்ணகிரி கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 91 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த ஒரு லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக திருவண்ணாமலையில் பிரம்மாண்டமாக விழா பந்தல் மேடை உள்ளிட்ட பல்வேறு இடங்கள் தயாராகி வருகிறது. நிகழ்ச்சியில் கலந்து கொள்பவருக்கு பிஸ்கட் தண்ணீர் உள்ளிட்ட 10 பொருட்கள் அடங்கிய உணவு பொருட்கள் வழங்கப்பட உள்ள நிலையில் அனைவருக்கும் மட்டன் பிரியாணி வழங்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக திருவண்ணாமலையை சுற்றியுள்ள 13 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்தந்த இடத்தில் காலை முதல் சுடச்சுட கமகமவென மட்டன் பிரியாணி தயாராகி வருகிறது.

குறிப்பாக தண்டராம்பட்டு சாலையில் உள்ள தனியார் மஹாலில் சுமார் 700 ஆடுகள் கொண்டுவரப்பட்டு 40,000 நிர்வாகிகளுக்காக பிரம்மாண்டமான மட்டன் பிரியாணி சுடச்சுட தயாராகி வருகிறது. ஆயிரக்கணக்கான ஆடுகள் வர வைக்கப்பட்டு ஒரு லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்காக சுத்தமான முறையில் சுகாதாரமான முறையில் சுடச்சுட பிரியாணி செய்யப்பட்டு வருகின்றன. தொடர்ந்து திமுக நிர்வாகிகள் அனைவரும் மட்டன் பிரியாணியை சுகாதாரமான முறையில் தயார் செய்து அனைத்து பிரியாணியையும் பேக் செய்து வாகனங்களில் கொண்டு செல்லும் பணியும் தற்போது தொடங்கியுள்ளது. வேலூர் மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக வருகை தரும் நிர்வாகிகளுக்கு காலை முதல் பல்வேறு மாநகரங்களில் இருந்தும் மாவட்டங்களில் இருந்தும் வரப்பற்றுள்ள பிரியாணி மாஸ்டர்களை கொண்டு சுத்தமான சுகாதாரமான முறையில் மட்டன் பிரியாணி தயார் செய்யப்பட்டு வருகின்றன. இந்த மட்டன் பிரியாணி செய்வதற்காக சுமார் 6000-க்கும் மேற்பட்ட நபர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.