×

‘சென்னை ஆட்சியர் சீதாலட்சுமி’… உட்பட 18 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து இதுவரை நூற்றுக் மேற்பட்ட ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, மாவட்ட ஆட்சியர்களை மாற்றி தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டு வருகிறார். 29 மாவட்டங்களில் புதிதாக பதவியேற்றிருக்கும் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். போலி ரேஷன் கடைகள் ஒழிப்பு, கொரோனா நிவாரணம் வழங்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் பற்றி முதல்வர் அவர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த நிலையில், தமிழகத்தில் மேலும் 18 ஐஏஎஸ்
 

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து இதுவரை நூற்றுக் மேற்பட்ட ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, மாவட்ட ஆட்சியர்களை மாற்றி தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டு வருகிறார். 29 மாவட்டங்களில் புதிதாக பதவியேற்றிருக்கும் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். போலி ரேஷன் கடைகள் ஒழிப்பு, கொரோனா நிவாரணம் வழங்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் பற்றி முதல்வர் அவர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த நிலையில், தமிழகத்தில் மேலும் 18 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஆட்சியராக இருந்த சீதாலட்சுமி வருவாய் பேரிடர் மேலாண்மை துறை இணை ஆணையராகவும் சமூக சீர்திருத்தத் துறையின் முதன்மைச் செயலாளராக பங்குஜ் ராம் சர்மாவும் விருதுநகர் ஆட்சியராக இருந்த கண்ணன் இந்து சமய அறநிலையத் துறையின் கூடுதல் ஆணையராகவும் காஞ்சிபுரம் ஆட்சியர் மகேஸ்வரி வேளாண் மற்றும் உழவர் நலத்துறை இணை செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், சமூக பாதுகாப்புத் துறை இயக்குனராக வளர்மதியும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் துறை மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய நிர்வாக ஆகாஷும் தென்காசி ஆட்சியர் கோபால சுந்தரராஜூம் ராமநாதபுரம் ஆட்சியராக சந்திரகலாவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.