×

ஜூலை மாதத்தில் 18.46 லட்சம் பயணிகள் பயணம் – சென்னை மெட்ரோ அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை காரணமாக கடந்த மே மாதம் மெட்ரோ ரயில் உள்ளிட்ட அனைத்து பொது போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்டது. பாதிப்பு கட்டுக்குள் வந்ததை பிறகு கடந்த ஜூன் மாதம் 21ஆம் தேதி 50% இருக்கை வசதிகளுடன் மெட்ரோ ரயில்கள் மீண்டும் இயங்கத் தொடங்கின. அதே சமயம் புறநகர் ரயில் மற்றும் பேருந்து செயல்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 21ம் தேதியிலிருந்து கடந்த ஜூலை 31-ஆம் தேதி வரை
 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை காரணமாக கடந்த மே மாதம் மெட்ரோ ரயில் உள்ளிட்ட அனைத்து பொது போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்டது. பாதிப்பு கட்டுக்குள் வந்ததை பிறகு கடந்த ஜூன் மாதம் 21ஆம் தேதி 50% இருக்கை வசதிகளுடன் மெட்ரோ ரயில்கள் மீண்டும் இயங்கத் தொடங்கின. அதே சமயம் புறநகர் ரயில் மற்றும் பேருந்து செயல்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 21ம் தேதியிலிருந்து கடந்த ஜூலை 31-ஆம் தேதி வரை மெட்ரோ ரயில்களில் பயணித்தவர்களின் விவரங்களை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் மட்டும் 18.46 லட்சம் பேர் மெட்ரோவில் பயணித்துள்ளதாகவும் அதிகபட்சமாக ஜூலை மாதம் 26 ஆம் தேதி 74 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்களில் பயணம் செய்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ரயில்களில் பயணம் செய்யும் போது மாஸ்க் அணியாமல் அல்லது சரியாக மாஸ்க் அணியாமல் வந்தவர்களிடம் இருந்து ரூ.200 அபராதமாக வசூலிக்கப்படுவதாகவும் இதுவரை ரூ.20,400 வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.