×

உள்ளாடை விளம்பரங்கள்… சகாதேவராசாவுக்கு மகளிர் ஆயம் பாராட்டு

ஆபாசம் கொஞ்சம் தூக்கலாக இருக்கும் சினிமா பாடல்களை எடிட் செய்துதான் ஒளிபரப்புகிறார்கள் தொலைக்காட்சிகளில். ஆனால், உள்ளாடை விளம்பரங்களில் பெண்களும் ஆண்களும் உள்ளாடையுடன் மட்டுமே வரும் விளம்பரங்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுவதால் பலரும் அதிர்ந்து போயிருக்கிறார்கள். இந்நிலையில்,தொலைக்காட்சிகளில் ஆபாசத்தைப் பரப்பும் வகையில் கருத்தடை சாதனங்கள், பாலியல் பிரச்சனை தொடர்பான மருந்துகள், உள்ளாடைகள், சோப்புகள் போன்றவற்றிற்கான விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுவதைச் சுட்டிகாட்டி, அவ்விளம்பரங்கள் இளைஞர்கள் மனதை கெடுத்து சீரழிப்பதால் அவற்றிற்குத் தடை கோரியிருந்தார் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த சகாதேவராசா. இவ்வழக்கில் தீர்ப்பளித்த
 

ஆபாசம் கொஞ்சம் தூக்கலாக இருக்கும் சினிமா பாடல்களை எடிட் செய்துதான் ஒளிபரப்புகிறார்கள் தொலைக்காட்சிகளில். ஆனால், உள்ளாடை விளம்பரங்களில் பெண்களும் ஆண்களும் உள்ளாடையுடன் மட்டுமே வரும் விளம்பரங்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுவதால் பலரும் அதிர்ந்து போயிருக்கிறார்கள்.

இந்நிலையில்,தொலைக்காட்சிகளில் ஆபாசத்தைப் பரப்பும் வகையில் கருத்தடை சாதனங்கள், பாலியல் பிரச்சனை தொடர்பான மருந்துகள், உள்ளாடைகள், சோப்புகள் போன்றவற்றிற்கான விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுவதைச் சுட்டிகாட்டி, அவ்விளம்பரங்கள் இளைஞர்கள் மனதை கெடுத்து சீரழிப்பதால் அவற்றிற்குத் தடை கோரியிருந்தார் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த சகாதேவராசா.

இவ்வழக்கில் தீர்ப்பளித்த மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி, ’’ஆபாச விளம்பரங்கள் ஒளிபரப்ப இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும், இது குறித்து நடுவண் தகவல் தொழில்நுட்பத்துறை செயலர், தமிழக செய்தி, திரைப்பட தொழில்நுட்ப மற்றும் திரைப்பட சட்டத்துறை செயலர் ஆகியோர் 2 வாரங்களுக்குள் பதிலளிக்க ஆணையிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

இதனால், இந்த வழக்கைத் தொடுத்த சகாதேவராசவுக்கு மகளிர் ஆயம் பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறது. இடைகாலத் தடைவிதித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோருக்கு மகளிர் ஆயம் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது என்கிறார் மகளிர் ஆயத்தலைவர் ம.லட்சுமி அம்மாள்.

அவர் மேலும், இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் காட்சி ஊடகங்களில் ஆபாச விளம்பரங்களை நிரந்தரமாகத் தடை செய்து ஆணையிட வேண்டும் என்றும்
கேட்டுக்கொண்டிருக்கிறார்.