#BREAKING மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேர் விடுதலை
Feb 16, 2024, 12:10 IST
கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மேலூர் தாசில்தார் காளிமுத்துவை தாக்கியதாக குற்றச்சாட்டை எழுந்தது.இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அழகிரி உள்ளிட்ட 14 பேர் மீது மதுரை மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஆரம்ப காலத்தில் இந்த வழக்கு விசாரணையின் போது மு.க .அழகிரி உட்பட யாரும் ஆஜராகவில்லை. அத்துடன் மதுரையில் தாசில்தார் தாக்கப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கு முன் ஜாமின் அளிக்கப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்தது.