×

காதல் திருமணம் வேண்டாம் – பரவசப்படுத்தும் இளைஞர்களின் புது ‘டிரண்ட்’

கண்ணோடு கண் நோக்கி காதலித்து, நண்பர்கள் புடை சூழ திருமணம் செய்து கொள்வதை விட, பெற்றோர் நிச்சயித்து சொந்த பந்தங்கள் புடை சூழ தட புடலாக திருமணம் செய்து கொள்வதையே இப்போதைய இளைஞர்கள் அதிகம் விரும்புகின்றனர் என ஒரு ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. ”இப்சாஸ்” எனும் மார்க்கெட் ஆய்வு நிறுவனம் சமீபத்தில் ஒரு கணக்கெடுப்பு நடத்தியது. இதில் சென்னை,மும்பை,டெல்லி,பெங்களூரூ,ஐதராபாத்,அகமதாபாத்,நாக்பூர்,சூரத், கான்பூர், லுதியனா ஆகிய 10 நகரங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.திருமணத்திற்கு ஆடைகள், நகைகள் வாங்க வந்த மால்கள்,பிரதான
 

கண்ணோடு கண் நோக்கி காதலித்து, நண்பர்கள் புடை சூழ திருமணம் செய்து கொள்வதை விட, பெற்றோர் நிச்சயித்து சொந்த பந்தங்கள் புடை சூழ தட புடலாக திருமணம் செய்து கொள்வதையே இப்போதைய இளைஞர்கள் அதிகம் விரும்புகின்றனர் என ஒரு ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.

”இப்சாஸ்” எனும் மார்க்கெட் ஆய்வு நிறுவனம் சமீபத்தில் ஒரு கணக்கெடுப்பு நடத்தியது. இதில் சென்னை,மும்பை,டெல்லி,பெங்களூரூ,ஐதராபாத்,அகமதாபாத்,நாக்பூர்,சூரத், கான்பூர், லுதியனா ஆகிய 10 நகரங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.திருமணத்திற்கு ஆடைகள், நகைகள் வாங்க வந்த மால்கள்,பிரதான பஜார் பகுதிக்கு வந்த 18 முதல் 35 வயதினர் என 1000 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் பல சுவராஸ்யமான தகவல்கள் தெரிய வந்துள்ளன.
திருமணம் என்பது பெரியோர்களால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணமாகவே இருக்க வேண்டும் என 82 சதவீதப் பெண்களும், 68 சதவீத ஆண்களும் அதாவது சராசரியாக 75 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

இதே போல் திருமண ஜவுளி அசத்தலாக இருக்க வேண்டும் என்று 73 சதவீதம் பேர், திருமண விழா ‘தூள்; கிளப்ப வேண்டும் என 65 சதம் பேர், விருந்து அமர்க்களமாக இருக்க வேண்டும் என 48 சதம் பேர் கூறியுள்ளனர்.
திருமண நிச்ச்யதார்த்த நிகச்சிக்கு இளைஞர்கள் மத்தியில் அதிக பட்ச வரவேற்பு இருக்கிறது. அடுத்த இடத்தில் ‘சங்கீத்’ எனப்ப்டும் இசை நிகழ்ச்சிகு 81 சதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதர சம்பிரதாய சடங்குகளுக்கு 71 சதம் பேர் “ஓகே” சொல்லியுள்ளனர். ‘மேக்கப்’பைப் பொறுத்த வரையில் ‘பேஷியல்’ எனும் முக அழகு முதலிடத்தில் இருக்கிறது. இதற்கு 46 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ‘ஸ்பா’ மற்றும் மூலிகை சிகிச்சைக்கு 23 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.


100 முதல் 200 பேரைத்தான் திருமணத்திற்கு அழைக்க வேண்டும் என வடக்கு, மேற்கு மாநில மக்கள் உறுதியாக இருக்க, “1000 பேர் வந்தாத்தான் கல்யாணம் களை கட்டும்” என்று சொல்கின்றனர் தென் மாநில மக்கள். திருமணம் என்றால் ‘பேச்சிலர்ஸ் பார்ட்டி’ இல்லாமலா? ‘தண்ணி பார்ட்டி’ என்றால் ரிசார்ட்டில் நடத்தலாம் என 34 சதம் பேரும், டீலக்ஸ் ஒட்டலில் நடத்தலாம் என 30 சதம் பேரும், ஒதுக்கு புரமாக பண்ணை வீட்டில் நடத்தலாம் என 13 சதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
திருமணம் முடிந்த சூட்டோடு ஒரு வாரத்திற்குள் ‘ஹனிமூன்’ போக வேண்டும் என 80 சதவீதம் பேர் கூறியுள்ளனர். ஹனிமூனுக்கு இந்தியாவில் கோவா, ஊட்டி,சிரிநகர் ஆகிய 3 டாப் இடங்களை அவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

சுபாஷ் சந்திரபோஸ்