×

கனமழையால் 1500 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்!

திருவாரூர் மாவட்டம் தே. மங்கலம், சித்தாநல்லூர் போன்ற பகுதிகளில் கனமழையால் 1500 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமாகின. கனமழை காரணமாக வாய்க்காலில் இருந்த நீர் விளை நிலங்களில் புகுந்ததால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தாலும், மழை நீர் விளை நிலங்களில் புகுந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் தே. மங்கலம், சித்தாநல்லூர் போன்ற பகுதிகளில் கனமழையால்
 

திருவாரூர் மாவட்டம் தே. மங்கலம், சித்தாநல்லூர் போன்ற பகுதிகளில் கனமழையால் 1500 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமாகின. கனமழை காரணமாக வாய்க்காலில் இருந்த நீர் விளை நிலங்களில் புகுந்ததால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தாலும், மழை நீர் விளை நிலங்களில் புகுந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில் தே. மங்கலம், சித்தாநல்லூர் போன்ற பகுதிகளில் கனமழையால் 1500 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமாகி உள்ளது விவசாயிகள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே 2019-20 ஆண்டிற்கான பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை திருவாரூர் மாவட்டத்திற்கு ரூ.201 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் 573 வருவாய் கிராமங்களில் 360 கிராமங்களுக்கு மட்டும் இழப்பீட்டு தொகை கிடைத்துள்ளது. இதனால் மீதமுள்ள 213 வருவாய் கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.