×

ஒரே இரவில் 15 பிரபல யூடியூப் சேனல்களை முடக்கிய ஹேக்கர்கள்!!

 

இரவோடு இரவாக 15 தமிழ் யூடியூப் சேனல்கள் ஹேக் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உலகம் முழுக்க 37 மில்லியன் யூடியூப் சேனல்கள் உள்ளன. அவற்றை 265 மில்லியன் பார்வையாளர்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்த சூழலில், தமிழில் பிரபல யூடியூப் லிஸ்ட்டில் இருக்கும், நக்கலைட்ஸ், பரிதாபங்கள், சென்னை மீம்ஸ் உள்ளிட்ட யூடியூப் சேனல்கள் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளன. தொழில்போட்டி காரணமாக இந்த சேனல்கள் முடக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, முடக்கப்பட்ட அத்தனை யூடியூப்களின் முகப்பிலும் கிரிப்டோ கரன்ஸி விளம்பரம் வெளியாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

ஒரே இரவில் முடக்கப்பட்ட அத்துணை சேனல்களும், பல நாட்களாக கண்காணிக்கப்பட்டு, திட்டமிட்டு முடக்கப்பட்டுள்ளன. காரணம், அவை அனைத்தும் Divo என்ற நிறுவனத்தின் துணையுடன் இயங்கிவரும் சேனல்கள். அவற்றில் பதிவிடப்பட்ட அனைத்து வீடியோக்களும் டெலிட் ஆகியுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட சேனல்கள் யூடியூப் நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளன. ஒருவாரத்தில் சேனல்களை மீட்டுதருவோம் என யூடியூப் நிறுவனம் உறுதி அளித்துள்ளது. இருப்பினும் மற்ற பிரபல யூடியூபர்களுக்கு இந்த சம்பவம், அதிர்ச்சியையும் பயத்தையும் கிளப்பியுள்ளது.