சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக 15 நீதிபதிகள் நியமனம்
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக 15 நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
8 வழக்கறிஞர்கள், 7 மாவட்ட நீதிபதிகள் என 15 பேரை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்மூலம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 66ஆக உயர்ந்தது. காலி நீதிபதிகளின் எண்ணிக்கை 9ஆக குறைந்தது. வழக்கறிஞர்கள் 8 பேர், மாவட்ட நீதிபதிகளாக இருந்த 7 பேருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள் என்.ரமேஷ், ஜி.கே.முத்துக்குமார், ஆர்.ஆர்.விவேகானந்தன், எஸ்.ரவிக்குமார்,என்.திலீப்குமார்,எ.மனோகரன்,கே.கோவிந்தராஜன்,ரஜ்னீஷ் பத்தியில் ஆகியோர் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட நீதிபதிகளாக இருந்த பி.முருகன்,எம்.டி.சுமதி, எஸ்.அல்லி, சி.திருமகள், சந்திரசேகர், எஸ்.கார்த்திகேயன், பி.முருகேசன், என்.குணசேகரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.