×

பண மோசடி வழக்கு- ஹரிநாடாருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

 

பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிநாடாரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

100 கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாக இரண்டு தொழிலதிபர்கள் இடம் பண மோசடி செய்த விவகாரத்தில் ஹரி நாடாரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த மாதம் 27 ம் தேதி பெங்களூரு பரப்பன சிறைச்சாலையில் கைது செய்திருந்தனர்.

ஹரி நாடார் மீது குஜராத்தை சேர்ந்த இஸ்மாயில் சக்ராத் மற்றும் கேரளாவைச்  சேர்ந்த பஷீர் ஆகிய இரு தொழிலதிபர்களிடமும் ரூ.100 கோடி வங்கிக்கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.1.5 கோடி பணம் பெற்று தங்களை ஏமாற்றியதாக கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சென்னை மத்திய குற்றப்பிரிவில் ஹரிநாடார் மீது புகார் அளித்துள்ளனர்.

இந்த புகார் தொடர்பாக மத்திய குற்ற பிரிவில் உள்ள ஆவண மோசடி தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஹரி நாடார் மோசடி செய்தது உறுதியானதால் , கைது நடவடிக்கை மேற்கொள்ள போலீசார் திட்டமிட்டனர். ஏற்கனவே பெங்களூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஹரி நாடாரை, இந்த வழக்கில் கைது செய்துள்ளனர்.

கடந்த 22 மாதங்களாக விசாரணை சிறைவாசியாக இருந்து வரும் ஹரி நாடாரை கடந்த மாதம் 27 அன்று காலை பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் வைத்து கைது செய்த நிலையில், பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் இருந்து வரும் ஹரி நாடாரை சென்னை மத்திய குற்றப்பிரிவு(CCB) போலீசார் இன்று  சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நீதியரசர் ரேவதி முன்னிலையில் ஆஜர் படுத்தினர். இதன் பின்னர் ஹரிநாடாரை 15 நாட்கள் நீதிமன்ற காவிலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதன்  பேரில் காவல்துறையினர் ஹரிநாடாரை புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.