பாகிஸ்தான் மருத்துவமனையில் ஏசி வெடித்து 15 குழந்தைகள் பலி..!
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு அறையில் இருந்த ஏசி கம்ப்ரெசர் திடீரென வெடித்துப் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. வேகமாகப் பரவிய தீ மற்றும் புகையால் 3-வது மாடியில் இருந்த அறையில் சிக்கி 15 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இஸ்லமாபாத்தில் செயல்பட்டு வரும் அரசுக்கு சொந்தமான பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்தில், பிரசவ வார்டில் உள்ள ஏசி கம்ப்ரசர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டுள்ளது. கொளுந்து விட்டு எரிந்த இந்தத் தீ, அறையின் மற்ற பகுதிகளுக்கு உடனடியாக பரவியது. இதனால், தீ மற்றும் நச்சுப்புகை அதிகளவில் வெளியேறியது.இதில், பிரசவ வார்டில் வைக்கப்பட்டிருந்த மொத்தம் 16 பச்சிளம் குழந்தைகளில், ஒரு குழந்தை மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டது.. மீட்புப் படையினர் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து ஒரு குழந்தையை மட்டும் உயிருடன் மீட்டுள்ள நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
எஞ்சிய 15 குழந்தைகள் தீ மற்றும் நச்சுப்புகையினால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தன. இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். குழந்தைகளின் உயிரைப் பறித்த இந்த சம்பவம் தொடர்பாக கூடுதல் உதவி ஆணையர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.