×

“3 வருடமாக கொத்தடிமைகளாக மாட்டிக்கிட்டோம்..” கண்ணீருடன் தப்பி வந்த 14 பேர்! அதிர்ச்சி சம்பவம்
 

 

கொத்தடிமைகளாக மூன்று ஆண்டுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த 14 பேர் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் இருளர் சமுகம் இதில் ஆறு குடும்பத்தைச் சேர்ந்தவர்களை கடலூர் மாவட்டம் திருவதிகை அருகே உள்ள தங்கசெட்டி என்பவர் கரும்பு வெட்டும் பணிக்காக அழைத்வந்துள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்திற்க்கு சென்று அழைத்த நிலையில் அனைவருக்கும் நல்ல சம்பளம் கொடுப்பதாகவும் முன்பணமாக ஆண்களுக்கு 10 ஆயிரம், பெண்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் என்று அவர் வழங்கி வந்துள்ளார். இதனை நம்பிய ஆறு குடும்பத்தைச் சேர்ந்த 22 பேர் அங்கிருந்து புறப்பட்டு திருவதிகைக்கு வந்தனர் அன்று முதல் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கரும்பு வெட்டும் பணியில் இவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள் ஆனால் இவர்களுக்கு முன்பணம் வாங்கியதை தவிர வேறு எந்த சம்பளமும் கொடுக்காமல் சாப்பாடும் சரியாக வழங்காமல் பணி வாங்கியதாக கூறப்படுகிறது. 

தொடர்ந்து இவர்கள் பணி செய்து வந்த நிலையில் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் கூட மருத்துவமனைக்கு அனுப்பாமல் அடித்து அவர்களை துன்புறுத்தி வேலை வாங்கியதாகவும் தெரிய வருகிறது மேலும் இவர்கள் தப்பித்து விடாமல் இருப்பதற்கு எந்த நேரமும் இவர்களை கண்காணிக்க ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் . இவர்களில் தற்பொழுது 22 பேரில் 14 பேர் இன்று தப்பித்து கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வந்து தஞ்சம் அடைந்தனர் மேலும் இவர்களில் ஒருவர் நிறைமாத கர்ப்பிணி உள்ளார் அவரும் அவரிடமும் தொடர்ந்து வேலை வாங்கியுள்ளார்கள் அவர்கள் தங்களை ஒரு மனிதர்களாகவே நினைக்கவில்லை என்று கண்ணீருடன் தெரிவித்த அவர்கள் உணவு இன்றி எதுவுமே இதயம் இல்லாமல் தங்கள் ஓடாய் தேய்ந்து போய் நிற்பதாகவும் அப்பொழுது கூட நீங்கள் பல லட்சம் பணம் வாங்கி விட்டீர்கள் என கூறி தொடர்ந்து வேலை செய்ய வற்புறுத்தியதாகவும் அவர்கள் தெரிவித்தனர் மேலும் இங்கு கொத்தடிமைகளாக யாராவது உள்ளார்களா என்ற கோணத்தில் தற்பொழுது தப்பித்து வந்தவர்கள் கூறி இடத்தில் மேலும் உள்ள கொத்தடிமைகளை மீட்பதற்காக தற்போது அதிகாரிகள் குழு மற்றும் காவல்துறையினர் சென்றுள்ளார்.