#BREAKING சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
சென்னையில் 35.58% வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்., எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணியை, தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதன்படி, முதல் கட்டமாக வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றது.மேலும் கணக்கீட்டு படிவங்களை நிரப்பி சமர்பிப்பதற்கான கால அவகாசம் இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கணக்கீட்டு படிவங்களை நிரப்பி சமர்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 14ம் தேதியுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. அதன்படி, SIR நடவடிக்கைகளுக்குப் பிறகு சென்னையில் இருந்து மட்டும் சுமார் 14. 25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இதற்கு முன் 40,04,694 வாக்காளர்கள் இருந்த நிலையில், SIRக்கு பிந்தைய வரைவு வாக்காளர் பட்டியலில் 25,79,676 பேர் உள்ளனர். 14,25,018 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து சென்னையில் 35.58% வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.