×

வங்கி லாக்கரில் இருந்து 137 கிராம் நகை மாயம்- மேலாளர் போலீசில் புகார்

 

சேலத்தில் தனியார் வங்கியின் லாக்கரில் வைத்திருந்த 137கிராம் நகை காணவில்லை என்று வங்கி மேலாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சேலம் மாநகர், ஐந்து ரோடு அருகே  மெய்யனூர் பகுதியில் இயங்கி வரும் எச்டிஎப்சி என்ற தனியார் வங்கியின் மேலாளராக இருப்பவர் சிவக்குமார்.   இதே வங்கியில் பிரகாஷ் என்பவர் நகை கடன்  பிரிவில் துணை மேலாளராக கடந்த மூன்று மாதங்களாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் நகை சாரிபார்க்கப்பட்ட போது அனைத்தும் சரியாக இருந்த நிலையில் , கடந்த 10 நாட்கள் பிரகாஷ் விடுமுறையில் சென்றுள்ளார். அவருக்கு பதிலாக  பொறுப்புகளை மற்றொரு அலுவலரான ஆர்த்தி என்பவருக்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு நரசோதிபட்டி பகுதியை சேர்ந்த கந்தசாமி என்பவர் தன்  தங்க வளையல்கள், செயின் என 137 கிராம் நகையை அடமானமாக  வைத்து மூன்று லட்சத்து 85 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். இதனுடைய மொத்த மதிப்பு 6 லட்சத்து 43 ஆயிரம் ஆகும். இந்நிலையில்  நகைகளை சரிபார்க்கப்பட்ட போது , அவை  காணவில்லை என 
தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தனியார் வங்கியின் மேலாளர் சிவகுமார், இதுதொடர்பாக நகை கடன் பிரிவு அலுவலர்கள் பிரகாஷ் மற்றும் ஆர்த்தி  ஆகியோரிடம் விசாரித்தபோது நகை காணாமல் போனது பற்றி எந்த விவரமும் தெரியவில்லை என்று கூறியுள்ளனர். இதுதொடர்பாக வங்கி மேலாளர் சிவகுமார் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் நகைகளை கண்டுபிடித்து கொடுக்கும்படி புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்...