×

அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும்! முதல்வருக்கு முத்தரசன் வைக்கும் கோரிக்கை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் முத்தரசன், ஈரோடு மாவட்டம் கோபிச் செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘’ எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க முடியாத அரசு நடிகர் சூர்யா மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது எனது தவறானது. அவர் கூரிய கருத்து சரியானது அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது’’என்றார். அவர் மேலும், ‘’மேற்கு மண்டலத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். முதலமைச்சர் தற்போது மாவட்டம் தோரும் ஆய்வு மேற்கொள்வது தனது பலத்தை அதிகரிப்பதற்காக இது போன்று
 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் முத்தரசன், ஈரோடு மாவட்டம் கோபிச் செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘’ எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க முடியாத அரசு நடிகர் சூர்யா மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது எனது தவறானது. அவர் கூரிய கருத்து சரியானது அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது’’என்றார்.

அவர் மேலும், ‘’மேற்கு மண்டலத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். முதலமைச்சர் தற்போது மாவட்டம் தோரும் ஆய்வு மேற்கொள்வது தனது பலத்தை அதிகரிப்பதற்காக இது போன்று நடந்துகொள்கிறார்’’என்றார்.

‘’144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் அரசியல் கட்சிகள் ஜனநாயக முறைப்படி இயங்க முடியவில்லை. அதனால் 144 தடை உத்தரவை அகற்ற வேண்டும்’’என்றும் தெரிவித்த அவர், ’’மேகதாதுவில் அணைக்கட்டுவது தொடர்பாக தமிழகத்தில் முதல்வர் தலைமையில் கட்சி பாகுபாடு இன்றி அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தி நீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அனைத்து கட்சி தலைவர்களும் பிரதமரை நேரில் சந்தித்து மேகதாதுவில் அணைக்கட்டுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’’என்று வலியுறுத்தினார்.