×

அரசு மருத்துவமனைகளில் கூடுதல் கட்டடங்கள் கட்ட ரூ.130 கோடி ஒதுக்கீடு!

 

45 அரசு மருத்துவமனைகளில் கூடுதல் கட்டிடம் கட்ட 130 கோடி மற்றும் 25 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் விடுதிகளை மேம்படுத்த 50 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள  50 அரசு மருத்துவமனைகளில் 160 கோடியில் கூடுதல் மருத்துவமனை கட்டிடங்கள் கட்டப்படும் என்று  சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதை செயல்படுத்தும் விதமாக முன்னுரிமை அடிப்படையில் 45 அரசு மருத்துவமனைகளில் கூடுதல் கட்டிடங்கள் கட்ட 130 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. 15 வது நிதிக்குழு மானியத்தில்  கோவை, திண்டுக்கல்,  கன்னியாகுமரி, கரூர், தஞ்சாவூர்,  திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இந்த கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. இதைத் தவிர்த்து 25 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள விடுதிகளை மேம்படுத்த 50 கோடி ஒதுக்கீடு செய்தும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.