×

9ம் வகுப்பு மாணவனால் 13 வயது சிறுமி கர்ப்பம்- அதிர்ச்சியில் பெற்றோர்

 

திருத்தணி பகுதியில் எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமியின் உடல் நிலை பாதிக்கப்பட்டு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  நிலையில் சிறுமி 7 மாத கர்ப்பம் என மருத்துவர்கள் தெரிவித்ததால் பெற்றோர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியைச் சேர்ந்த 13வயது  சிறுமி 8ம் வகுப்பு தேர்வு முடிந்து விடுமுறையில் வீட்டில் உள்ளார். இந்நிலையில் அந்த சிறுமிக்கு  உடல் நிலை பாதிக்கப்பட்டதால், பெற்றோர்  திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்து கிடந்தது.13வயது சிறுமி 7 மாதம் கர்ப்பிணியாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. 

இச்சம்பவம் தொடர்பாக  மருத்துவர்கள்  போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து சிறுமியின்  பெற்றோர்  அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.  விசாரனையில் சிறுமியிடம்  அதே பகுதியைச் சேர்ந்த  தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வரும்  மாணவன்  பாலியல் பலாத்காரம் செய்ததில், கர்ப்பமானது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவனை சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு அனுப்பிவைக்கபப்டும் என்று போலீசார் தெரிவித்தனர். அதே நேரத்தில் பலவீனமடைந்துள்ள சிறுமியை சிகிச்சைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச் சம்பவம் திருத்தணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது