#BREAKING தமிழ்நாடு காவல்துறையில் 13 உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்
காத்திருப்போர் பட்டியலில் இருந்த கன்னியாகுமரிமாவட்ட முன்னாள் எஸ்பி டாக்டர் ஸ்டாலின் ஐபிஎஸ், சென்னை மேற்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி.,யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
▪️ கன்னியாகுமரி எஸ்.பி. பொறுப்பில் இருந்து மாற்றப்பட்ட ஸ்டாலின், சென்னை வடக்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி. ஆக நியமனம்
▪️ சேலம் மாநகரக் காவல் ஆணையர் ஜோஷி நிர்மல் குமார், சென்னை தலைமை அலுவலகத்தில் நவீனப்படுத்துதல் பிரிவு ஐ.ஜி. ஆக நியமனம்
▪️ சென்னை மாநகர கூடுதல் ஆணையராக இருந்த பாபு, சேலம் மாநகர ஆணையராக நியமனம்
▪️ சேலம் சரக டி.ஐ.ஜி, சந்தோஷ் ஹடிமணி சென்னை காவல் உளவுப் பிரிவு இணை ஆணையராக நியமனம்
▪️ லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஐ.ஜி. தேவராணி, சேலம் சரக டி.ஐ.ஜி. ஆக நியமனம்
▪️ கோவை தீவிரவாத தடுப்புப் பிரிவு எஸ்.பி. ஆக இருந்த பத்ரி நாராயணன், சென்னை அடையாறு துணை ஆணையராக நியமனம்
▪️ காத்திருப்புப் பட்டியலில் இருந்த எஸ்.பி. கார்த்திகேயன், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய எஸ்.பி. ஆக நியமனம்
▪️ சென்னை போதைப் பொருள் தடுப்பு குற்றப் புலனாய்வுத்துறை எஸ்.பி. மதிவானன், சென்னை பரங்கிமலை துணை ஆணையராக நியமனம்
▪️ சென்னை பரங்கிமலை துணை ஆணையர் ஸ்ரீனிவாசன், சென்னை போதைப் பொருள் தடுப்பு குற்றப் புலனாய்வுத்துறை எஸ்.பி ஆக நியமனம்
▪️ தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய எஸ்.பி. ஆக இருந்த ஸ்டாலின், சிபிசிஐடி தென் மண்டல எஸ்.பி. ஆக நியமனம்
▪️ சென்னை மாநகர பாதுகாப்பு துணை ஆணையராக இருந்த சுந்தர வடிவேல், சென்னை மாநகர காவலர் நலன் பிரிவு துணை ஆணையராக நியமனம்
▪️ சென்னை வண்ணாரப்பேட்டை துணை ஆணையராக இருந்த பாஸ்கரன், சேலம் மாநகர வடக்கு துணை ஆணையராக நியமனம்
▪️ சேலம் வடக்கு துணை ஆணையர் அங்கித் சிங், சென்னை வண்ணாரப்பேட்டை துணை ஆணையராக நியமனம்