தாய்ப்பால் குடித்து கொண்டிருந்த 13 நாள் குழந்தை மரணம்! தாம்பரத்தில் சோகம்
Jun 19, 2025, 15:37 IST
சென்னை அடுத்த தாம்பரத்தில் தாய்ப்பால் குடித்து கொண்டிருந்த போதே குழந்தை மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே பிறந்து 13 நாளே ஆன குழந்தை தாய் பால் குடித்தபோது மூச்சுத்திணறி உயிரிழந்தது. காச நோய் காரணமாக குழந்தையின் தாய், வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்றுவந்த நிலையில், பால் குடித்த பச்சிளம் குழந்தை அசைவு இல்லாமல் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாய், தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை எடுத்து சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.