×

செல்போன் வாங்கி கொடுக்காததால்  12ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை

 

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே செல்போனுக்கு அடிமையாகி புதிய செல்போன் வாங்கி கொடுக்காததால்  12ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆத்திகுளம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் உதய பிரகாஷ் (17). இவர் கயத்தாறு அரசு மேல் நிலைப்பள்ளியில் 12 ம் வகுப்பு வரலாற்று பிரிவில் படித்து வந்துள்ளார்.தந்தை கேரளாவில்  பணிபுரிந்து வருகிறார். தாய் முத்துமாரியுடன் உதயபிரகாஷ் வசித்து வந்துள்ளார். இன்று தாய் கூலி வேலைக்கு செல்ல இன்று பள்ளிக்கு விடுமுறை எடுத்து வீட்டில் தனியாக இருந்துள்ளார்.  தாய் முத்துமாரி வேலை முடித்து மாலை வீட்டிற்கு வந்து வீட்டின் ததவை தட்டியுள்ளார்.

வீடு உட்புறம் பூட்டப்பட்டிருந்தது திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த முத்துமாரி ஜன்னல் வழியே பார்த்த போது உதயபிரகாஷ் மின்விசிறியில் வேஷ்டியால் தூக்குமாட்டி இறந்த நிலையில் தொங்கியுள்ளார். அருகில் இருந்த உறவினர்களை அழைத்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இறந்த நிலையில் இருந்துள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கயத்தாறு போலீசார், உதய பிரகாஷ் உடலை பிரேத பரிசோதனைக்கு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்து எதற்காக தற்கொலை செய்து கொண்டர் என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் உதயபிரகாஷ் எப்போதும்  செல்போனில் 
மூழ்கி இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது செல்போன் பழுதானதால் புதிய செல்போன் வாங்கி கொடுக்குமாறு தாயிடம் கேட்டுள்ளார். இதனால் சில நாட்களாக மனம் உடைந்து காணப்பட்ட உதய பிரகாஷ்  இன்று பள்ளிக்கு செல்லாமல் தனக்கு வயிற்று வலி என தாயிடம் கூறிவிட்டு வீட்டில் இருந்துள்ளார்.இந்நிலையில் தான் வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆத்திகுளத்தில் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.