×

பிளஸ் 2 தேர்வு தேதி மாற்றம்! தமிழக அரசு திடீர் அறிவிப்பு

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்ட நேரத்தில் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததால் 9,10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும் அவர்களுக்கு திறனறிவு தேர்வை நடத்துமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதனிடையே, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி மே 3-ஆம் தேதி நடைபெறும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை காரணமாக தமிழகத்தில் மே. 3
 

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்ட நேரத்தில் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததால் 9,10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும் அவர்களுக்கு திறனறிவு தேர்வை நடத்துமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதனிடையே, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி மே 3-ஆம் தேதி நடைபெறும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை காரணமாக தமிழகத்தில் மே. 3 ஆம் தேதி நடக்கவிருந்த பிளஸ் 2 முதல் தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. மே. 3 ஆம் தேதி நடைபெறவிருந்த மொழிப்பாட தேர்வு மே 31 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மற்ற தேர்வுகள் அனைத்தும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிகளிலேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றி தேர்வுகள் நடக்கும் என தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.