திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க நகைகள் காணிக்கை!
திருப்பதி ஏழுமலையானுக்கு உச்சி முதல் பாதம் வரை அலங்கரிக்க 121 கிலோ தங்க நகைகள் காணிக்கையாக வழங்கபட்டன.
திருப்பதி ஏழுமலையானுக்கு 206 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை சென்னை தொழிலதிபர் வர்தமான் ஜெயின் காணிக்கையாக வழங்கினார். சென்னையைச் சேர்ந்த வெளிநாடு வாழ் தொழிலதிபர் வழங்கிய 121 கிலோ தங்க ஆபரணங்கள் முதலமைச்சர் சந்திரபாபு முன்னிலையில் திருப்பதி தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்பட்டன. மூலவரை உச்சி முதல் பாதம் வரை அலங்கரிப்பதற்காக அளவெடுத்து செய்யப்பட்ட ஆபரணங்கள், பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டன. காணிக்கையாக வழங்கபட்ட நகைகளில் கிரீடம், சங்கு, சக்கரம், இடுப்பு ஆபரணங்கள், கை ஆபரணங்கள் உள்ளிட்ட 46 வகையான நகைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு தங்க புடவையும் வழங்கபட்டது. திருப்பதி வரலாற்றிலேயே ஒரு தனிநபர் இவ்வளவு அளவிலான தங்க ஆபரணங்களை காணிக்கையாக செலுத்துவது இதுவே முதல்முறையாகும்.
யார் இந்த வர்தமான் ஜெயின்?
அமெரிக்காவில் உள்ள ACCESS HEALTHCARE (மெடிக்கல் பில்லிங் மற்றும் தொழில்நுட்பச் சேவை நிறுவனம்) மற்றும் ASIA CHENNAI ENGINEERING ஆகிய நிறுவனங்களை நிறுவியவர்.
2025-ஆம் ஆண்டில் ACCESS HEALTHCARE-ன் 70% பங்குகளை ரூ.18,524 கோடிக்கு விற்பனை செய்தவர்.
காஞ்சி காமகோடி குழந்தைகள் நல அறக்கட்டளை மருத்துவமனையின் நிர்வாக அறங்காவலர்.
முன்பு DELL நிறுவனத்தின் BPO பிரிவு மேலாண் இயக்குநராகப் பணியாற்றியவர்.
கல்வி:
சென்னை லயோலா கல்லூரியில் புள்ளியியல் துறை பயின்றவர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் கணினி அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.