×

வேகக் கட்டுப்பாட்டு விதிகள் அமல்- முதல் நாளில் 121 வழக்குகள் பதிவு

 

சென்னையில் புதிய வேகம் வரம்பு கட்டுப்பட்டு விதிகள் நடைமுறை படுத்தப்பட முதல் நாளில் 121 வழக்குகள் பதிவு செய்து ரூ.1,21,000 போக்குவரத்து காவல் துறையால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது 

சென்னை பெருநகரத்தில் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு வாகன ஓட்டிகளுக்கான புதிய வேக வரம்பை இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.  அதன் அடிப்படையில் இன்று முக்கிய பிரதான சாலைகளில் இரண்டு மணி நேர சுழற்சி முறையில் ஒவ்வொரு இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது இது மட்டுமல்லாமல் ANPR தானியங்கி கேமராக்கள், ரேடார் வாகனம் RADAR VECHILE,ரேடார் கன் RADAR GUN உதவியுடன் அதிக வேகத்தில் பயணிக்க கூடிய நபர்கள் கண்டறியப்பட்டு அவரது எண்ணிற்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் சென்னை பெருநகர காவல் துறை தெரிவிக்கப்பட்டிருந்தது  

அதன்படி வேகமாக செல்லும் நபர்களின் வாகன எண்கள் கண்டறிந்து இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் லேசான வாகனங்களான கார்களுக்கு 1000 ரூபாயும், கனரக வாகன ஓட்டிகளுக்கு 2000 ரூபாயும் அபராதம், விதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் அமல்படுத்த பட்ட இன்று தற்பொழுது நிலவரப்படி 121 வழக்குகள் போடப்பட்டு 121000 ரூபாய் அபராதம் விதிக்க பட்டுள்ளது. இன்று பதியப்பட்ட வழக்குகளில்  4 கார்கள் ,117 இருசக்கர வாகனங்கள் இடம் வசூல் செய்யப்பட்டுள்ளது ஒரு வாகனத்திற்கு 1000 விதம் 121000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதில் 63 வழக்குகள் கேமிரா கருவி உதவி மூலமாகவும் வேகத்தை அளவிட்டும். 58 வழக்குகள் போக்குவரத்து காவல்துறையினர் கையில் வைத்திருந்த வேகவரம்பு ரேடார் கண்(RADAR GUN) உதவியுடன் வழக்குகள் போடப்பட்டுள்ளது.