12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய விநாயகர்..!
மேஷ ராசி
செவ்வாயின் ஆதிக்கம், வீரம், சரியென்று தோன்றுவதை செய்யும் நீங்கள் வழிபட வேண்டியவர் வீர கணபதி ஆவார்.
ரிஷப ராசி
சுக்கிரனின் ஆதிக்கம், அம்பிகையின் அருள், ராசியில் சந்திரன் உச்சம் மற்றும் ராஜயோக அமைப்பை பெற்ற நீங்கள் வழிபட வேண்டியவர் ராஜராஜேஸ்வரியின் அம்சத்தில் உள்ள ஸ்ரீவித்யா கணபதி ஆவார்.
மிதுன ராசி
பல்வேறு திறமைகள், எதிரிகள், மறைமுக தாக்குதல் என அடிக்கடி அவதிப்படும் நீங்கள் வழிபட வேண்டியவர் லட்சுமி கணபதி ஆவார்.
கடக ராசி
அபார ஞானமும், ஞாபக சக்தி, மற்றவர்களை வழிநடத்தும் திறன் போன்ற பல்கலை வித்தகர்களான நீங்கள் வழிபட வேண்டியவர் ஹேரம்ப கணபதி ஆவார்.
சிம்ம ராசி
இயற்கையில் தைரிய குணம், வெற்றித்திருமகள் துணை, தன்னம்பிக்கை குறையாத மன வலிமையுடன் இருக்கும் நீங்கள் வழிபட வேண்டியவர் விஜய கணபதி ஆவார்.
கன்னி ராசி
இயற்கையில் பெண்மை குணம், சரியான துணை, காரிய வெற்றி என சிறந்து விளங்கும் நீங்கள் வழிபட வேண்டியவர் மோகன கணபதி ஆவார்.
துலாம் ராசி
அயராத உழைப்பு, வெற்றி பெற்றாலும் நிறைவு கொள்ளாமல் அடுத்த லட்சியத்தை நாடி சென்று வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் நீங்கள் வழிபட வேண்டியவர் ஷிப்ர ப்ரஸாத கணபதி ஆவார்.
விருச்சக ராசி
சுறுசுறுப்பான குணம், நினைத்ததை செய்து முடிக்கும் எண்ணம், எப்போதும் பரபரப்புடன் இயங்கி வரும் நீங்கள் வழிபட வேண்டியவர் சக்தி கணபதி ஆவார்.
தனுசு ராசி
குருவின் ஆதிக்கம், நேர்மை, தர்மநெறியை பின்பற்றி அதனால் சங்கடத்தை சந்தித்து வரும் நீங்கள் வழிபட வேண்டியவர் சங்கடஹர கணபதி ஆவார்.
மகர ராசி
சனிபகவான் ஆதிக்கம், தியாக உள்ளம், அளவான ஆசை, விட்டுக் கொடுத்துச் செல்லும் மனப்பான்மை கொண்ட நீங்கள் வழிபட வேண்டியவர் யோக கணபதி ஆவார்.
கும்ப ராசி
அனுபவ அறிவு, அடக்கி ஆளும் திறன், அறிந்திராத விஷயத்தை அறிந்து கொள்வதில் ஆர்வம், தனித்திறமை மூலம் முன்னேறி வரும் நீங்கள் வழிபட வேண்டியவர் சித்தி கணபதி ஆவார்.
மீன ராசி
கள்ளம், கபடம், சூதுவாது தெரியாத குழந்தைத்தனமான குணம், எல்லோரும் நல்லவர்கள் என்ற எண்ணம் கொண்ட நீங்கள் வழிபட வேண்டியவர் பால கணபதி ஆவார்.